நாளை உலகம் முழுவதும் இணைய சேவை முடங்குமா? பின்னணியில் டிரம்ப் - உண்மை என்ன?
நாளை உலகம் முழுவதும் இணைய சேவை முடங்கும் என தகவல் பரவி வருகிறது.
இணைய பயன்பாடு
இன்றைய உலகம் இணையம் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது. பணம் செலுத்துவது தொடங்கி அலுவலக வேலைகள் என அனைத்தும் இன்றைய உலகம் இணையத்தை சார்ந்தே உள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் நாளை(15.01.2024) இணையசேவை முடங்கும் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து காண்போம்.
தி சிம்ப்சன்ஸ் கார்டூன்
அமெரிக்காவில் கடந்த 1989 ஆம் ஆண்டு தி சிம்ப்சன்ஸ் என்ற கார்டூன் தொடர் வெளியாகி வருகிறது. இந்த கார்டூன் தொடர் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் என கூறப்படுகிறது. தி சிம்ப்சன்ஸ் கார்டூன் தொடரில் வந்துள்ள சில காட்சிகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிம்ப்சன்ஸ் கார்டூன் தொடரில் வரும் 16 ஜனவரி 2025 அன்று உலகம் முழுவதும் இணைய சேவை முடங்குவதாக காட்டப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் டிரம்ப் ஜனவரி 16 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவி ஏற்பார். கடலுக்கு அடியில் உள்ள இணைய கேபிள்களை சுறா மீன்கள் கடித்து உலகம் முழுவதும் இணைய சேவை முடங்கும்.
Simpsons prediction for 16 jan 🤔#nointernet #borring #nocard #electricy pic.twitter.com/Fw8wLqh31N
— abhay solanki (@abhay8769) January 12, 2025
இதனால் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. சிறுவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாட முடியாமல் ஓடி ஆடி விளையாடுவார்கள். மக்கள் தங்களிடம் உள்ள உணவை பகிர்ந்து வாழ்வார்கள் என்பது போல் காட்டப்படுகிறது.
டிரம்ப் பதவியேற்பு
ஆனால் இந்த வீடியோவை ஆய்வு செய்ததில் அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்துள்ளது. மேலும், டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதிதான் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
ஆனால் நெட்டிசன்கள் பலர் நாளை இணையம் முடங்கும் என அச்சப்படுகின்றனர். சிலர் இணையம் இல்லாத உலகில் வாழ்ந்து பார்க்க ஆசை என கூறி வருகின்றனர்.