அமெரிக்காவிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான் - சூப்பர் ஓவரில் விழுந்த அடி!!
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் யூ.எஸ்.ஏ அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
சூப்பர் ஓவர்
டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த அமெரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. ஆனால், அடுத்த வந்த கேப்டன் பாபர் ஆசாம் - சதாப்கான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 159/7 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி எனகளமிறங்கிய அமெரிக்கா அணியில், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோனான்க் பட்டேல் - ஆண்டீரிஸ் கவுஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பாகிஸ்தான் தோல்வி
கேப்டன் மோனான்க் பட்டேல் 38 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட்டாக, ஆண்டீரிஸ் கவுஸ் 35 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் அடித்து ஆட்டத்தை சமனில் முடித்தார் அமெரிக்காவின் நிதீஷ்குமார்.
சூப்பர் ஓவர் சென்ற நிலையில், முதலில் அமெரிக்கா பேட்டிங் செய்தது.முகமது அமீர் அடுத்தடுத்து பல வைடுகளை வீச அமெரிக்கா 18 ரன்களை குவித்தது.
19 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான், சூப்பர் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.