மாட்டுப்பால் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல்..இனி நாடு முழுக்க விற்கவும், அருந்தவும் தடை!
பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்க மாட்டு பல் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
பறவைக் காய்ச்சல்
அமெரிக்க மற்றும் அதன் மாகாணங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அவை மாடுகளை பாதிப்பதும் அதிகரித்துள்ளதால் கறந்த பச்சை பாலை அருந்தவும், விற்கவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை விதித்து அறிவுறுத்தலும் வழங்கியுள்ளது.
முன்னதாக மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் (ஏவியன் இன்ஃப்ளுயன்ஸ்ஸா வைரஸ்) பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த வாரம் உயிரிழந்தார். இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது. இதனை அடுத்து, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மாகாணங்களில் கறவை மாடுகளுக்கு
பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உறுதியானது. அந்நாட்டு வேளாண்மைத்துறை அறிக்கையின்படி அங்குள்ள 82 மந்தைகளில் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, கறந்த பாலை அருந்துவது என்பவது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் ஏகனவே தடை செய்யப்பட்டுள்ளது.
மாட்டுப்பால் தடை
எனினும் ’மனித நுகர்வுக்கு அல்ல’ என்ற பிரிவின் கீழ் விற்பனையாவதை, பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் அருந்துவது தொடர்ந்து வருகிறது. பச்சை பாலின் பல்வேறு பயன்பாடுகளிலும் பேஸ்டுரைஸ் செய்வதை எஃப்டிஏ கட்டாயமாக்கி உள்ளது. அமெரிக்காவின் அறிவுறுத்தலை
அடுத்து பல்வேறு உலக நாடுகளும் கறந்த பச்சை பாலை அருந்துவதை தடை செய்து வருகின்றன. பறவை காய்ச்சல் மட்டுமின்றி, இதர விபரீத வைரஸ்கள், இகோலி, பாக்டீரியா தொற்றுகள் போன்றவை மனிதர்களை பாதிக்க வாய்ப்பாகிறது.
மற்றபடி பறவைக் காய்ச்சல் அதிகம் பரவிவரும் தற்போதைய சூழலில், காய்ச்சல், இருமல், தொண்டை புண், தசை வலி, தலைவலி, சுவாச பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.