மக்களே உஷார்...பறவை காய்ச்சலால் உலகின் முதல் பலி - WHO முக்கிய எச்சரிக்கை!
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதல்முறை ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
பறவை காய்ச்சல்
மெக்சிகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில், காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற உடல் பிரச்சனைகளுடன் 59 வயதான நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.இதுவரை பறவைக் காய்ச்சல் பிற விலங்குகளைப் பாதித்து உயிரிழப்பும் ஏற்பட்டதில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறி இருந்தது.
ஆனால் கடந்த மாதம் இவர் உயிரிழந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தேதி உலக சுகாதார மெக்சிகோ சுகாதார அதிகாரிகள், ஒரு மனிதருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் தெரிவித்தது.
முதல் பலி
மெக்ஸிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது குறித்த பதிவுகள் இருந்தாலும், இந்த வைரஸ் பரவக்கூடியது என்பதற்கான ஆதாரம் தெரியவில்லை என WHO கூறுகிறது. இந்த பறவை காய்ச்சல் மார்ச் மாதம் தீவிரமாக பரவ தொடங்கியதில், Michoacan மாகாணத்தில் உள்ள கோழிகளை பாதித்தது. மேலும் மற்ற பகுதிகளுக்கு மெல்ல பாதித்து வந்தது.
உலகில் முதல் முறையாக பறவை காய்ச்சலால் இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் கோழிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. பறவைக் காய்ச்சலின் H5N1 மாறுபாடு, அமெரிக்காவில் உள்ள கறவை மாடுகளிடையே பல வாரங்களாக பரவி வருகிறது.
அதே சமயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்கு தொற்று ஏற்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை. மாறாக, இந்த நோய் கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றுகிறது.