பேரழிவு: தீவிரமாக பரவிய ஜாம்பி மான் நோய் - எங்கு, என்ன பின்னணி!

United States of America Virus
By Sumathi Dec 27, 2023 07:52 AM GMT
Report

ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

ஜாம்பி மான் நோய்

அமெரிக்காவின் 32 மாகாணங்கள் மற்றும் கனடாவின் 4 மாகாணங்களில் ஜாம்பி மான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.

zombie-deer-disease

கன்சாஸ், நெப்ராஸ்கா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. வயோமிங் மாகாணத்தில் உள்ள YellowStone தேசிய பூங்காவில் உயிரிழந்த மானுக்கு நாள்பட்ட கழிவு நோய் (CWD) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug - பகீர் வீடியோ

அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக்கும் Zombie Drug - பகீர் வீடியோ

பாதிப்பு எச்சரிக்கை

இந்நிலையில், இது மனிதர்களுக்குப் பரவக்கூடும் என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள் இந்த தொற்றை 'மெதுவாக நகரும் பேரழிவு' என்று தெரிவித்துள்ளனர். ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் பரவுகிறது.

பேரழிவு: தீவிரமாக பரவிய ஜாம்பி மான் நோய் - எங்கு, என்ன பின்னணி! | Us Zombie Deer Disease Spread Update

இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும். இதுகுறித்து, தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் திட்ட இணை இயக்குனரான ஆண்டர்சன் கூறுகையில்,

இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் சாத்தியம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அது நிச்சயம் நடக்கும் என்று யாரும் கூறவில்லை, ஆனால் மக்கள் தயாராக இருப்பது முக்கியம். ஏனெனில் இந்த நோய் ஆபத்தானது, குணப்படுத்த முடியாதது மற்றும் மிகவும் வேகமாக பரவக்கூடியது. நோயை அழிக்கும் பயனுள்ள எளிய வழி நம்மிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த நோய் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்கு இனங்களை பாதிக்கும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் திசுக்களை உட்கொள்ள வேண்டாம் என்று தேசிய பூங்கா சேவை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.