சகோதரனுடன் உறவில் இளம்பெண் - இறுதியில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தனக்கு தெரியாமலேயே இளம்பெண் ஒருவர் சகோதரனை காதலித்து வந்துள்ளார்.
செயற்கை கருவுறுதல்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் விக்டோரியா ஹில். இவர் இளைஞர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின் அவருடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார்.
திடீரென ஒருநாள் அந்த இளைஞர், விக்டோரியா ஹில்லுக்கு அதிர்ச்சியான மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “இருவரது மரபணுக்களையும் சோதித்து பார்த்தபோது, நீ எனக்கு சகோதரி என்பது தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இளம்பெண் வேதனை
இதையடுத்து தான் இளைஞரும், விக்டோரியாவும் செயற்கை கருவுறுதல் மூலம் பிறந்தவர்கள். இவர்களது தாய்களுக்கு மருத்துவம் பார்த்தவர் ஒரே மருத்துவர். பார்டன் கேட்வெல் என்ற அந்த மருத்துவர், கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விந்தணு தானம் செய்துள்ளார்.
இப்போது மரபணு சோதனை செய்தபோது, இந்த உண்மை தெரியவந்துள்ளது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள விக்டோரியா, எனது சகோதரனுடன் உறவில் இருந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
நான் யாரைப் பார்த்தாலும், என் சகோதரியோ, சகோதரனோ என்ற அச்சம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
டாக்டர் பார்டன் கேட்வெல் இதுவரை 23 குழந்தைகளின் பிறப்புக்கு காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.