குழந்தைகளை பெற்றெடுத்த ரோபோ - குறைந்த கட்டணத்தில் செயற்கை கருத்தரிப்பு

Spain
By Thahir May 01, 2023 09:06 AM GMT
Report

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை பெற்றெடுத்த ரோபோ 

பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலைப் பயன்படுத்தி ஸ்பெர்ம் ரோபோ மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர். 

A robot that gave birth to babies

அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்தன.

இதன் மூலம் செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெண்கள் பயன்படுத்த இயலும்.