3 1/2 நிமிஷத்துல பாஸ்தா வேகலையாம்... ரூ.40 கோடி இழப்பீடு கேட்ட பெண்!
பாஸ்தா தயாராக அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக கூறி ரூ.40 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு கோரப்பட்டுள்ளது.
பாஸ்தா
புளோரிடாவைச் சேர்ந்தவர் அமண்டா ரமிரெஸ். இவர் பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் விரக்தியடைந்து, ரூ.40 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் 3.5 நிமிடத்தில் வெந்துவிடும் என விளம்பரம் செய்ததாகவும், ஆனால் அதை பயன்படுத்தும் போது அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு புகார்
மேலும்,மூன்றரை நிமிடங்களில் மைக்ரோவேவில் தயார் செய்துவிடலாம் என்று அந்த நிறுவனம் கூறுவது தவறு. இந்த நேரத்தில் உணவு சமைக்க முடியாது. பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என்று அந்த பெண் புகார் கூறுகிறார்.
பாஸ்தாவை சமைக்க தேவைப்படும் சரியான நேரம் குறித்த விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் தயாரிப்புகளை வாங்கியிருக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்த புகார் மிகவும் அற்பமானது என்றும் இதற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.