சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமா? அப்போ இதையெல்லாம் சாப்பிடாதீங்க...

பொதுவாக நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, சரியான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியமாகும்.

சர்க்கரை நோயானது இரத்த ஓட்டத்தை மட்டுமின்றி, உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

அதிலும் ஒரு சிலர் ஆரோக்கியமற்ற உணவுகளையும் எடுத்து கொள்கின்றனர். இதனால் சர்க்கரை அளவு கூடுமே தவிர குறையாது. எனவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க ஒரு சில உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.

அந்தவகையில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் தொடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பேக்கரி பொருட்கள் 

பேக்கரி பொருட்கள் உங்களின் இரத்த சர்க்கரை அளவுகளுக்கு நல்லது அல்ல. கப்கேக்குகள், குக்கீகள் அல்லது வெள்ளை ரொட்டி போன்ற உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.

பாஸ்ட் புட் உணவு

பாஸ்ட் புட் உணவுகள் ஆரோக்கியமற்றவை, அதனை எல்லோரும் தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரெஞ்ச் ப்ரைஸ், பர்கர், பாஸ்தா போன்ற சில பாஸ்ட் புட் உணவுகளில் மோசமான கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்து உள்ளன. மேலும், அவை உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவு வகையைச் சேர்ந்தவை என்பதால் அவை நீரிழிவு நோயாளிகளின் உடலுக்கு நல்லதல்ல. ​

தயிர்

சுவையூட்டப்பட்ட தயிர் ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் இருப்பதாக உங்களுக்கு தோன்றும். ஆனால், சுவையூட்டப்பட்ட தயிரில் பெரும்பாலும் நிறைய சர்க்கரை மற்றும் செயற்கை சுவை தான் இருக்கும். அதனால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

பால்

கொழுப்பு நிறைந்த பாலில் நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இது உடலின் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும். இதனால் முழு கொழுப்பு நிறைந்த பாலை விட குறைந்த கொழுப்புள்ள பாலை எடுத்துக் கொள்ளலாம்.

தேன்

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், நீங்கள் தேன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது இயற்கையான பொருள் என்றாலும், உங்கள் உடலில் இரத்தகுளுக்கோஸ் அளவை இது அதிகரிக்க செய்யும். அதனால், முடிந்தவரை தேனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

ஜூஸ்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள் நல்லதல்ல. இவற்றில் அதிக அளவு பிரக்டோஸ் மட்டுமே இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும். 

மாம்பழம், சப்போட்டா

நீரிழிவு நோயாளிகள் அதிகப்படியான மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை உங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றில் அதிக அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளது, இவை சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். அதனால் குறைந்த அளவு மட்டுமே அதனை சாப்பிட வேண்டும். .

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்