2 மி மதிப்புள்ள சமைத்த கோழி - திருடிய பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை!
1.98 மி. மதிப்புள்ள கோழி உணவு வகைளை திருடிய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கு
அமெரிக்கா, சிகாகோ நகரைச் சேர்ந்தவர் லிடெல்(66). ஹார்வே பள்ளி மாவட்ட உணவுச் சேவைப் பிரிவுக்கு இயக்குநராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் 2020 ஜூலை மாதத்திற்கும் 2022 பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏராளமான கோழி உணவு வகைகளை திருடி மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட 11,000 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சமைத்த கோழி இறக்கைகளை திருடியுள்ளார்.
9 ஆண்டுகள் சிறை
அவற்றைப் பள்ளிகளுக்கு உணவுச் சேவை விநியோகிக்கும் வாகனத்தின் மூலம் பெற்று பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில், வீடுகளில் இருந்து இணையம் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்காக உணவு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட உணவுகள் எதுவும் பள்ளிப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து புகார் அடிப்படையில் நடந்த விசாரணையில் அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட உணவுகள் யாருக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.