சுகர் இருந்தாகூட இனி விசா கிடையாது - புது குண்டைத்தூக்கி போட்ட டிரம்ப்
நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளது.
விசா
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி செய்ய இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த எச் 1பி விசாவில் இந்தியர்கள் தான் அதிகம் பயனடைந்த நிலையில் சிக்கலானது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடல்நல குறைபாடு
உடல்நல குறைபாடு உள்ளவர்களின் விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அவர்களின் விசா விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில்,

‛‛சர்க்கரை நோய், இதயநோய், சுவாசக்கோளாறு, புற்றுநோய், உடல்பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்க கூடாது. இவர்களின் விசா விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும்.
நோய் பாதிப்புடன் அமெரிக்கா வருவோரால் நம் நாட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த நடைமுறையை பின்பற்றி விசாவிற்கு விண்ணப்பம் செய்வோரின் உடல்நலனை ஆராய்ந்து அனுமதி என்பது வழங்கப்பட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.