விசா விதிகளில் மாபெரும் மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு ஷாக்!
கனடா விசா விதிகளில் மாபெரும் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
விசா விதி மாற்றம்
கனடா தனது புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்கப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

தற்காலிக குடியிருப்பாளர்களின் பங்கை மக்கள் தொகையில் 5% க்கும் குறைவாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் 15.5 மில்லியன் மாணவர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
2027-2028 ஆம் ஆண்டில் 150,000 மாணவர்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுவார்கள். இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 50% குறைவு. இது சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுக்கும்.
என்ன பாதிப்பு?
பல்கலைக்கழகங்களின் பன்முகத்தன்மையை பாதிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 220,000 தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் 230,000 தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இருப்பினும், 33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் தோராயமாக 50% ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன.
மேலும் இந்த விகிதம் இப்போது 80% ஐ எட்டக்கூடும்.இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் 74% ஆகஸ்ட் 2025 இல் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.