தண்ணில மிதக்கும் குடிசை - ஒரு நைட் தங்க எவ்வளவு தெரியுமா?
பிலோட்டிங் க்ளாஸிர் ஹட் என்ற மிதக்கும் குடிசை வைரலாகி வருகிறது.
பிலோட்டிங் க்ளாஸிர்
க்ரீன்லாந்த், குலுசுக் என்ற சிறிய குடியிருப்பில் அமைந்துள்ள “பிலோட்டிங் க்ளாஸிர் ஹட்” படு வைரலாகி வருகிறது. மிதக்கும் குடில் என்பதுதான் இதன் பிரத்யேக தன்மை.

உயரமான பனிமலைகள், அமைதியான பனிச்சறுக்கைகள் மற்றும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு வெறும் ஏழு வாரங்கள் மட்டுமே இரண்டு விருந்தினர்களுக்காக திறக்கப்படுகிறது.
எவ்வளவு தொகை?
ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் 5,500 DKK (சுமார் ரூ.75,000). இதன் தொகையில் குலுசுக் நகரிலிருந்து தனியார் படகு சேவை மற்றும் சிறந்த இரவு உணவு அடங்கும். இரவுகளில் வானில் பளிச்சென்று மின்னும் வட துருவ ஒளி காட்சியை குடிலிலிருந்தே கண்டு ரசிக்கலாம்.

இரவு நேரத்தில் விருந்தினர்களுக்காக தனிப்பயன் கோர்மே பார்பிக்யூ (Gourmet BBQ) விருந்தும் ஏற்பாடு செய்யப்படும். குலுசுக் அல்லது டாசியிலாக் நகரிலிருந்து தனிப்பட்ட பிக்கப் சேவை ஏற்பாடு செய்யப்படும்.