பூமிக்கு புது நிலா; 60 ஆண்டுகளாக மறைந்திருந்த ஆச்சர்யம் - மிரண்ட விஞ்ஞானிகள்!
பூமிக்கு புதிதாக ஒரு நிலா கிடைத்துள்ளது.
புது நிலா
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அருகே சுற்றி வரும் புதிய நிலா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 'குவாசி மூன்' என்று அறியப்படும் இந்த நிலாவிற்கு 'அர்ஜுனா 2025 பிஎன்7' என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை போலவே இதுவும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த இரண்டு கோள்களின் சுற்றுப்பாதையும் வேகமும் ஒரே அளவில் இருக்கிறது. வெறும் 62 அடி அளவு மட்டுமே கொண்ட சிறிய கோள்.
விஞ்ஞானிகள் தகவல்
பல ஆண்டுகளாக இந்த சிறுகோள் பூமியின் அருகே சுற்றி வந்த போதிலும் இதுவரை கண்டறியப்படாமல் இருந்துள்ளது. உயர் திறன் கொண்ட அதி நவீன ஹைடெக் டெலஸ்கோப் மூலமாக இந்த சிறுகோள் சிக்கியுள்ளது.

இந்த சிறுகோள் இன்னும் சில ஆண்டுகள் பூமியின் அருகிலேயே சுற்றி வரும் என்றும் அதன்பிறகு பூமியை விட்டு விலகி செல்ல வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பூமியின் சிக்கலான சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் இந்த புது நிலா, 1960களில் முதன் முதலாக வந்ததாகவும் 2080 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பூமியுடனேயே பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.