இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா - என்ன காரணம்?

United States of America India Flight Citizenship
By Sumathi Oct 28, 2024 07:30 AM GMT
Report

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்ட விரோதம்

2024-ம் நிதியாண்டில் இதுவரை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளனர்.

இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா - என்ன காரணம்? | Us To Repatriate Illegally Staying Indians

அவர்களை 495 விமானங்கள் மூலம் 145 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொலம்பியா, ஈகுவேடார், பெரு, எகிப்து, மொரிடேனியா, செனெகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதென்ன டிஜிட்டல் காண்டம்? எப்படி வேலை செய்யும் - நிறுவனம் சொல்றதை பாருங்க

அதென்ன டிஜிட்டல் காண்டம்? எப்படி வேலை செய்யும் - நிறுவனம் சொல்றதை பாருங்க

அமெரிக்கா நடவடிக்கை

இந்த தீவிர நடவடிக்கையால் அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்,

இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா - என்ன காரணம்? | Us To Repatriate Illegally Staying Indians

அமெரிக்காவில் குடியேற சட்டப்பூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.