சுதந்தர தேவி சிலையை திடீரென திரும்ப கேட்கும் பிரான்ஸ் - என்ன காரணம்?
சுதந்திர தேவி சிலையை திரும்ப பிரான்ஸிடமே ஒப்படைக்க வேண்டும் என எம்.பி கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
சுதந்திர தேவி சிலை
நியூயார்க்கில் அமைந்துள்ள, சுதந்திர தேவி சிலை 126 ஆண்டு கால பழமைவாய்ந்தது. பிரான்ஸ் நாட்டின் சார்பில் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இச்சிலைக்குள் 354 படிக்கட்டுகள் இருந்தன. சமீபத்தில் நடந்த சீரமைப்பின் காரணமாக, படிக்கட்டுகள் 393 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அப்போதிருந்தே இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பார்லிமென்டில் பேசிய எம்.பி., ரபேல் குளக்ஸ்மேன், அமெரிக்காவின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன்.
பிரான்ஸால் வெடித்த சர்ச்சை
அமெரிக்காவின் நடவடிக்கை ஜனநாயகம், சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கிறது. அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறார்கள். இதனால் பிரான்ஸ் பரிசாக கொடுத்த சுதந்திர தேவி சிலையை அவர்கள் வைத்திருக்க தகுதியில்லை. இதனால் நட்பின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் ஒப்படைப்பதாக இல்லை. 2ம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்ஸ், அமெரிக்க படையினரின் முயற்சியால் தான் விடுவிக்கப்பட்டது.
அன்று அமெரிக்காவின் உதவி இல்லையெனில் பிரான்சில் இப்போது ஜெர்மனி மொழிதான் பேசி கொண்டிருப்பார்கள். எனவே அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.