பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் - அப்படியே பல்டி அடித்த அமெரிக்கா

Joe Biden United States of America Pakistan
By Sumathi Oct 18, 2022 12:04 PM GMT
Report

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆபத்தான நாடு

எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு என்றார். பாகிஸ்தான் குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் - அப்படியே பல்டி அடித்த அமெரிக்கா | Us Says Pakistan Will Protect Nuclear Weapons

ஜோ பைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது.

அமெரிக்கா பல்டி

இந்நிலையில், அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல், அணு ஆயுதத்தை பாதுகாப்பதில் பாகிஸ்தானின் திறன் மற்றும் உறுதிபாட்டில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

பாதுகாப்பு மற்றும் வளமான பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவுக்கு முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம். பாகிஸ்தானுடனான நீண்டகால ஒருங்கிணைப்பை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் மிகவும் வலிமையான உறவை கொண்டுள்ளோம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.