அனைத்தையும் தூண்டிவிடுவது அந்த சாத்தான்தான் - கொந்தளித்த ஈரான்!
போராட்டங்களைத் தூண்டிவிடுவது அமெரிக்காதான் என ஈரான் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிஜாப் சர்ச்சை
மஹஸா ஆமினி எனும் இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அரசுக்கு எதிரான போரட்டங்கள் வலுத்து வருகின்றன.

போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஈரானின் குடிமக்களுக்கு, குறிப்பாக துணிச்சலான பெண்களுக்குத் துணை நிற்கிறோம்.
அமெரிக்கா கருத்து
ஈரானில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது எது என்று திகைத்துவிட்டேன்” என்று கூறியிருந்தார். மேலும், இந்தப் போராட்டம் முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், “ஒரு நாட்டில் குழப்பத்தையும் வன்முறையையும் தூண்டி அழிவை ஏற்படுத்துபவர் அமெரிக்க அதிபர். அவரது இந்தக் கருத்து, அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரின் (அயதுல்லா கோமேனி) வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது” என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரயீஸி கூறியுள்ளார்.
ஈரான் பதிலடி
மேலும், இதுதொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘எதிரியின் சதியை முறியடிக்க, ஈரான் மக்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.