ஆபத்தான நாடா.. ஜோ பைடன் கருத்துக்கு கொந்தளித்த பாகிஸ்தான்
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பையே விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் சாடல்
அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் கலந்துக் கொண்டார். அப்போது, 'உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம்.. அந்நாட்டில் அணு ஆயுதங்களில் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லாத நிலை நிலவி வருகிறது' என்றார்.

மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த விமர்சனத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் கொந்தளிப்பு
அதில், ''பாகிஸ்தான் பொறுப்பு மிக்க அணு ஆயுத நாடு என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அணு ஆயுதம் தொழில்நுட்ப ரீதியாகவும் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது.
அணு ஆயுத விவகாரங்களை பொறுத்தவரை சர்வதேச தரநிலைகளை கடைப்பிடிக்கும் வகையில் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.