மருத்துவமனை மாடி முழுவதும் அழுகிய நிலையில் 200 மனித உடல்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்
மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் 200 மனித உடல்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
200 சடலங்கள்
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரம் உள்ளது. அங்கு மருத்துவமனை ஒன்றில், உடற்கூறு ஆய்வு மையத்தின் மாடியில் சிதைந்த நிலையில் 200 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில் பஞ்சாப் மாகாண முதல்வர் சவுத்ரி ஜாமென் புத்தரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அதில் அந்த அறையின் மாடியில் குப்பை போல மனித உடல்கள் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
இதையடுத்து அந்த உடல்களை முறைப்படி தகனம் செய்ய உத்தரவிட்டதோடு, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் முசாமில் பஷீர் தலைமையில்
ஆறு உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு மூன்று நாட்களில் அறிக்கை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியம் அசார்ப்,"
மருத்துவமனையில் மரணம் அடைந்தவர்களின் உடல்களும், உடல் தான மூலம் பெறப்பட்ட உடல்கள் பல்கலைக்கழக மாணவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டவை என்றும்
மருத்துவ நோக்கங்களுக்காகவே இவை மேற்கூறையில் வைக்கப்பட்டன எனவும் அரசு விதிகளின்படியே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.