அப்படியே.. கடலில் மூழ்கிய அணு சக்தி நீர்மூழ்கி - கட்டுமானத்தின் போதே நடந்த சம்பவம்!
அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மூழ்கிய நீர்மூழ்கி
சீன கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை. மேலும், 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன.
இந்நிலையில் கடற்படையின் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் பாறையில் மோதியது. இதில் மொத்தம் 55 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
அதிகாரிகள் தகவல்
வூஹான் நகர் அருகே அந்த நாட்டின் கப்பல் கட்டுமான தளம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் சீன கடற்படையின் புதிய அணு சக்தி நீர்மூழ்கி வூஹான் தளத்தில் நங்கூரமிட்டிருந்தது. அமெரிக்காவின் மேக்சர் டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த மார்ச் 10-ம்தேதி எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தில் சீன நீர்மூழ்கி இடம்பெற்றிருந்தது.
கடந்த மே 16-ம் தேதி அமெரிக்காவின் பிளானட் லேப்ஸ் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தில் சீன நீர்மூழ்கியை காணவில்லை. அந்த நீர்மூழ்கி கடந்த மே அல்லதுஜூன் மாதத்தில் கடலில் முழுமையாக மூழ்கியுள்ளது. அணு எரிபொருள் இருந்திருந்தால் நிச்சயமாக கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கும்.
புதிய அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியதை சீன அரசு இதுவரை மறைத்து வருகிறது. சீன நீர்மூழ்கிகளின் வலிமை கேள்விக்குறியாகவே இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.