அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் பதறிப்போன இந்திய அரசு!

United States of America India Tourism
By Sumathi Oct 08, 2022 06:24 AM GMT
Report

அமெரிக்கா நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள அறிவிப்பால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

சுற்றுலா

சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் பதறிப்போன இந்திய அரசு! | Us Says Be Cautious While Traveling To India

குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என, இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா உத்தரவு

பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலா தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன என்று அறிவித்துள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் பதறிப்போன இந்திய அரசு! | Us Says Be Cautious While Traveling To India

திடீரென தாக்குதல் நடத்தலாம் என்றும் அந்த பயண ஆலோசனையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் யாருமே செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அரசு அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்கா பிறப்பித்துள்ள இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்துள்ளது.