சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமந்தா - என்ன பிரச்சணை?

Samantha United States of America Indian Actress
By Sumathi Sep 21, 2022 06:30 AM GMT
Report

உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா

சினிமா திரையுலகில் முன்னனியில் வலம் வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமந்தா - என்ன பிரச்சணை? | Samantha Going To Usa

அதன்பின், அவர் கால் வைத்த இடமெல்லாம் வெற்றி என நோக்கில் வளர்ச்சியடைந்தார். தொடர்ந்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பின் சற்று அதிகமாகவே நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதோடு மட்டுமில்லாமல், உடலை பேணுவதிலும் அக்கறை காட்டி வந்தார்.

தோல் நோய்

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. தொடர்ந்து தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். பாலிவுட் பக்கமும் திரும்புவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம்தான் உள்ளது.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமந்தா - என்ன பிரச்சணை? | Samantha Going To Usa

இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

அமெரிக்கா பயணம்

இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் தேவர்கொண்டா உடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது Polymorphous Light Eruption என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.இதனால் இதற்கு சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார்.சமந்தா.அவர் விரைவில் நாடு திரும்பி மீண்டும் குஷி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.