பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் பிரம்மாண்ட கடல் - வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு!
பூமிக்கடியில் மிகப் பெரிய நீர் ஆதாரம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நீர் ஆதாரம்
அமெரிக்காவை சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் பூமியின் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து ஆராய்ச்சிகள் செய்துவருகிறது. இந்த ஆராய்ச்சியில் பூமிக்கடியில் மிகப் பெரிய நீர் ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட 3 மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதன் காரணமாக பூமியில் தண்ணீர் உருவானதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பு படி பூமியின் ஆழத்திலிருந்து பூமியில் தண்ணீர் தோன்றியிருக்கலாம் என்று யூகிக்க வைக்கிறது. இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில் "நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது..?
வலுவான ஆதாரம்
இதற்கான விடை என்பது பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.
பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நில அதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது.
இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. இது தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது’’ என்று தெரிவித்துள்ளார்.