டைம் டிராவல்: 2023ம் ஆண்டில் இருந்து 5000ம் ஆண்டுக்கு சென்ற நபர் - ஆதாரம் காட்டி ஷாக்!
நபர் ஒருவர் தான் டைம் டிராவல் செய்து 3000 ஆண்டுகள் முன்னாடி சென்று இந்த உலகத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.
டைம் டிராவல்
காலம் கடந்து பயணிப்பதை 'டைம் டிராவல்' என்று அழைக்கப்படுகிறது. அதில் பயனிப்போரை டைம் டிராவலர் என்று கூறுவார்கள். டைம் டிராவலிங் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பலர் தங்களை டைம் ட்ராவலர் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் எட்வர்ட் என்ற நபர் தன்னை டைம் டிராவலர் என்று அடையாளப் படுத்தியுள்ளார். இவர், தான் டைம் ட்ராவல் செய்ததற்கான ஒரு புகைப்படத்தையும் ஆதாரமாக வைத்துள்ளார். மேலும், 2023ம் ஆண்டில் இருந்து 3000 ஆண்டுகள் முன்னாடி சென்று 5000ம் ஆண்டு இந்த உலகம் எப்படி இருந்தது என்பதை பார்த்ததாக எட்வர்ட் கூறுகிறார்.
நீரில் மூழ்கிய நகரம்
அவர் வைத்துள்ள அந்த புகைப்படத்தில் ஒரு நகரம் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக பேசிய எட்வர்ட், அந்த நகரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் என்றும், 3000 ஆண்டுகளுக்கு பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதுமாக நீரில் மூழ்கடிப்பட்டடிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புவி வெப்பமயமாதல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வருங்காலத்தில் நீரில் மூழ்கடிக்கப்படும் என்றும் எட்வர்ட் தெரிவித்துள்ளார். இவரின் இந்த டைம் டிராவலிங் கதையை கேட்ட இணையவாசிகள், இந்த கதை சிரிப்பை வரவழைப்பதாக கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.