குர் ஆனை எரித்து வேட்பாளர் - இஸ்லாத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக சபதம்!

Viral Video United States of America
By Sumathi Aug 28, 2025 02:04 PM GMT
Report

வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

குர் ஆன் எரிப்பு

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள 31வது காங்கிரஸ் மாவட்டத் தொகுதிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சி சார்பில், வாலண்டினா கோம்ஸ் என்பவர் போட்டியிடுகிறார்.

valentina gomez

இவர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்துள்ளார்.

வரிகளை அள்ளி வீசிய டிரம்ப் - இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வரிகளை அள்ளி வீசிய டிரம்ப் - இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அதிர்ச்சி வீடியோ

இதுதொடர்பான ஒரு வீடியோவில், ”டெக்சாஸில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது குறிக்கோள். முஸ்லிம்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

அவர்கள் 57 முஸ்லிம் நாடுகளில் எங்கும் செல்லலாம். மேலும் தனது இலக்கை அடைய தனக்கு மக்கள் உதவ வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், அவர் குர் ஆனை எரித்ததற்காக வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது அங்கு சர்ச்சையாக வெடித்துள்ளது.