மனித உடலில் சதை உண்ணும் ஒட்டுண்ணி; புழு தொற்று - மரணமும் ஏற்படலாம்!
மனித உடலில் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டறியப்பட்டுள்ளது.
ஒட்டுண்ணி
ஒட்டுண்ணிப் புழுவான ‘ஸ்க்ரூவேர்ம்' (screwworm) மனித உடலில் ஊடுருவிய முதல் பாதிப்பு அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெரிலேண்ட் நகரைச் சேர்ந்த ஒரு நோயாளி, சமீபத்தில் எல் சால்வடாரில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கு இந்த அரிதான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவேர்ம் மயாசிஸ்’ என்ற பாதிப்பு, பொதுவாக விலங்குகளின் தோலில் புதைந்து வாழும் ஈ லார்வாக்களால் ஏற்படுகிறது. இந்த தொற்றால் கடுமையான வலி ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மரணம் கூட ஏற்படலாம்.
கடும் அபாயம்
பொதுமக்களுக்கு இதன் அச்சுறுத்தல் 'மிகவும் குறைவு' என்றும், இந்த ஆண்டு நாட்டில் எந்தவொரு விலங்குக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த அபாயத்தைத் தடுக்க, அமெரிக்கா, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. டெக்சாஸில் 'மலட்டு ஈ' உற்பத்தி மையத்தை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன.
பாதிப்புள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் காயங்களை மூடிக்கொள்வது மற்றும் கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.