மிருகம் பாதி.. மனிதன் பாதி.. புதிய இனத்தால் மிரண்ட விஞ்ஞானிகள்!
முந்தைய மனிதர்களின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்களின் எச்சம்
சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் 2006ல் ஆய்வு நடத்தினர்.
அதில் சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை கண்டுபிடித்தனர். இதன் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், புதிய மனித இனம் இருந்ததற்கான ஆதாரமாக தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகள் அதிர்ச்சி
அந்த மண்டை ஓடுகளின் பற்களை ஆய்வு செய்திருக்கின்றனர். மொத்தம் 21 மனித பற்களை கண்டுபிடித்தனர். மண்டை ஓடுகளில் மூன்றாவது கடைவாய்ப்பற்கள் குறிப்பிடத்தக்க அளவில் சிறியதாக உள்ளன. இது நவீன மனிதர்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அம்சம்.
நமக்கு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் உணவுப் பழக்கவழக்க மாற்றங்களுக்கு ஏற்ப, தாடை சுருங்கியிருக்கிறது. இது கிழக்கு ஆசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.
இந்த மரபு ஹோமோ சேபியன்ஸ் கிளையிலிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்து, நியாண்டர்தால் அல்லது டெனிசோவன் இனங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.