உலகின் அதிக எடையுடைய சிறைவாசி - நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் செலவில் பராமரிப்பு
உலகின் அதிக எடையுடைய சிறைவாசி நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் செலவில் பராமரிக்கப்படுகிறார்.
உலகின் அதிக எடையுள்ள சிறைவாசி
ஆஸ்திரியாவில் 29 வயதான நபர் ஒருவர் வீட்டில், 45 கிலோ கஞ்சா, 2 கிலோ கொக்கெய்ன் உள்ளிட்ட போதைபொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன் காரணமாக அவரை கைது செய்த காவல்துறையினர், அவரை வியன்னாவில் உள்ள ஜோசப்ஸ்டாட் சிறையில் அடைத்துள்ளனர்.
300 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள அவர், உலகின் அதிக எடையுள்ள சிறைவாசியாக அறியப்படுகிறார்.
ஜோசப்ஸ்டாட் சிறையில் அவரின் அதிக எடை காரணமாக அவரின் படுக்கை வளைந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கோர்னி யூபர்க் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஒருநாள் செலவு ரூ.1.6 லட்சம்
அங்கு அவருக்கு பிரத்யேகமாக செய்யப்பட்ட கட்டில் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளது. மேலும், வெளிப்புற செவிலியர்கள் 24 மணிநேரமும் பராமரிக்கின்றனர்.
அவரின் பராமரிப்புக்காக நாளொன்றுக்கு 1800 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம்) செலவிடப்படுவதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற கைதிகளை விட இது 10 மடங்கு அதிகம் ஆகும். மற்ற கைதிகளுக்கு சராசரியாக 180 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.6,000) செலவிடப்படுகிறது.
ஒரு போதைப்பொருள் குற்றவாளிக்கு ஏன் மக்களின் வரிப்பணத்தில் இருந்து பாரிய தொகையை செலவிட வேண்டும் என இந்த சம்பவம் பொதுமக்களிடயே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.