லாட்டரியில் 2,800 கோடி ஜாக்பாட்; ஆசையாய் வாங்க போன நபர் - நிறுவனம் கொடுத்த ஷாக்!
லாட்டரி குலுக்கலில் ஒருவருக்கு 2,800 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
பரிசுத்தொகை
அமெரிக்கா, வாஷிங்டன் டிசி நகரை சேர்ந்தவர் ஜான் சிக்ஸ். இவர் கடந்த மாதம் “பவர் பால்” நிறுவனத்தில் இருந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். குலுக்கலில் ரூ.2,800 கோடி பரிசு விழுந்துள்ளதாக இணையத்தில் நிறுவனம் அறிவித்திருந்தது.
மறுநாள் தான் வாங்கிய லட்டரி டிக்கெட்டின் எண் அதில் இடம் பெற்றதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த நபர் பவர் பாலை அனுகியுள்ளார். ஆனால், லாட்டரி டிக்கெட் பரிசுத்தொகை எண் தவறாக பப்லிஷ் ஆகிவிட்டதாக கூறி பரிசுத்தொகையை வழங்க மறுத்துள்ளனர்.
நிறுவனம் மறுப்பு
இதனால், விரக்தியடைந்த ஜான் சீக்ஸ், வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். பரிசுத்தொகை மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து தனக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இதுகுறித்து ஜான் சீக்ஸ் பேசுகையில், எனக்கு பரிசுத்தொகை விழுந்ததாக கேள்விப்பட்டதும் நான் மிகழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும் அளவுக்கதிமாக சந்தோஷம் அடையவில்லை. மறுநாள் லாட்டரி அலுவலகத்திற்கு சென்ற போது, எனக்கு பணம் கிடையாது என நிராகரித்தனர்.
விதிகளின் படி எனது டிக்கெட் செல்லுபடியானது இல்லை என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால், எட்டு விதமான வழக்குகளை நான் தாக்கல் செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.