அதிக நேரம் லஞ்ச் பிரேக் எடுத்த பெண் - ஆத்திரத்தில் சுட்டு கொன்ற சக ஊழியர்
பெண் ஒருவர் அதிக நேரம் பிரேக் எடுத்ததால் ஆத்திரத்தில் சக ஊழியர் அவரை சுட்டு கொன்றுள்ளார்.
சுட்டு கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள உள்ள டாலஸ் நகரில் அலெஜியன்ஸ் ட்ரக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அங்கு பணியாற்றி வந்த டிராவிஸ் மெர்ரில்(51) தனது சக பெண் ஊழியர் தம்ஹாரா கொலாசோவை துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார்.
அதிக நேரம் பிரேக்
தகவலறிந்த காவல்துறை உடனடியாக டிராவிஸ் மெர்ரிலை கைது செய்துள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொலாசோவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிராவிஸ் மெர்ரிலிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலாசோ பணியின் போது அதிக நேரம் பிரேக் எடுக்கிறார் என தெரிவித்துள்ளார்.
தான் ஓய்வு எடுக்கும் போது என்னை கண்காணிக்க வேண்டாம் என்றும், அது பற்றி அடிக்கடி மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம்(HR) கூற வேண்டாம் என்றும் கொலாசோ தெரிவித்துள்ளார். மேலும் கொலாசோ பல நேரங்களில் டிராவிஸ் சொல்வதை கேட்காமல் இருப்பது அவருக்கு ஆத்திர மூட்டியுள்ளது.
அன்றும் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்ற கொலாசோ நீண்ட நேரமாக வராமல் தனது காரில் ஓய்வெடுத்துள்ளார். இதை பார்த்த டிராவிஸ் ஆத்திரத்துடன் தனது காருக்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். அலுவலகத்தில் உள்ளே வந்து அவரது கேபினுக்கு சென்ற கொலாசோவை, பின் தொடர்ந்து சென்ற டிராவிஸ் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.