பேஸ்புக்கில் வினோத கவிதை - தம்பியின் கண்ணை பிடிங்கி சாப்பிட அண்ணன்
தம்பியை கொன்று அவரது கண்ணை பிடிங்கி அண்ணன் சாப்பிட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையில் புகார்
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் வசித்து வருபவர் 31 வயதான மேத்யூ ஹெர்ட்ஜென். இவருக்கு 26 வயதில் ஜோசப் ஹெர்ட்ஜென் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர்களின் தந்தை டேவிட் ஹெர்ட்ஜென், அங்குள்ள பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, இரவு 11:15 மணியளவில் காவல் துறையை அழைத்த மேத்யூ ஹெர்ட்ஜென், இங்கு ஒரு சடலம் உள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்ணை சாப்பிட அண்ணன்
உடனடியாக காவல்துறையினர் வந்து பார்த்த போது, ஜோசப் ஹெர்ட்ஜெனின் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். அருகே தீயில் எரிக்கப்பட்ட பூனையின் உடலும் இருந்துள்ளது.
சிதைந்த உடல், இரத்தக்கறை படிந்த கத்தி, முள்கரண்டி மற்றும் பிளேடு ஆகியவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த காவல்துறையினர், மேத்யூ தான் இந்த கொலை செய்தார் என அவரை கைது செய்தனர்.
விசாரணையில், மேத்யூ பிளேடால் அவரது தம்பியின் கண்ணை கிழித்து வெளியே எடுத்து சாப்பிட்டார் என தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நடைபெற ஒரு மாதத்திற்கு முன்னர் மேத்யூ தந்து பேஸ்புக் பக்கத்தில் வினோதமான கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வினோத கவிதை
இந்த கவிதையில், நீ என்ன படைத்தாய்? ஏன் படைத்தாய்? யாரை கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறாய்?. நீ எந்தக் கடவுளுக்குச் சேவை செய்கிறாய்? கத்திகள் கூர்மையாவதை என்னால் பார்க்க முடிகிறது. அம்புகள் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது. என் இதயம் துடிப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அவனால் முடியுமா?
அந்த அறையில், சுவர்கள் நடுங்கும் அந்த அறையில் யாரோ ஒருவர் தனியாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு இன்னும் துடிப்பு இருக்கிறது, அவரது நரம்புகளில் இரத்தம் இன்னும் பாய்கிறது. ஆனால் ஏதோ ஒன்று அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவரை அழுத்துகிறது; அவரை மூச்சுத் திணற வைக்கிறது; மூச்சுத் திணற வைக்கிறது.
அவரது காதுகள் மின்னுகின்றன; அவரது முகம் அதிர்கிறது; அவருக்கு வலிக்கிறது. அவர் துடிக்கிறார் ; அவர் தொலைந்துவிட்டார்; அவர் தூங்கிவிட்டார்; அவர் இறந்துவிட்டார்.” என குறிப்பிட்டுள்ளார்.