800 மைல் சென்று கருக்கலைப்பு செய்த காதலி - காதலன் வெறிச்செயல்!
கருக்கலைப்பு செய்த காதலியை காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
கருக்கலைப்பு
அமெரிக்கா, செக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹரோல்டு தாம்ப்சன். இவர் கேப்ரியல்லா கொன்சேல்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் இவர் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், கேப்ரியல்லா 800 மைல் பயணம் செய்து கொலராடோவுக்கு சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். ஏனென்றால் அங்கு கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காதலி கொலை
தொடர்ந்து, இந்த தகவலறிந்த காதலனை சந்தித்து அருகில் உள்ள பூங்காவில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கலைப்பு குறித்த வாக்குவாதத்தில் காதலன், பெண்ணொஇன் கழுத்தை நெறித்துள்ளார்.
உடனே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்ற பெண்ணை தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே கேப்ரியல்லா உயிரிழந்தார். உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.