திருடுப்போவதாக கனவு; தூக்கத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர் - ஷாக் சம்பவம்!

United States of America
By Sumathi Jun 16, 2023 10:40 AM GMT
Report

 கனவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனவு

அமெரிக்கா, பாரிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டிகாரா(62). இவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருடுப்போவதாக கனவு; தூக்கத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர் - ஷாக் சம்பவம்! | Us Man Accidentally Shoots Himself In Sleep

அதில் அவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இவருக்கு கனவு வந்துள்ளது. தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து திருடுவது போல கனவு கண்டுள்ளார். அப்போது திருடர்களை தாக்குவதாக எண்ணி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது காலிலேயே சுட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு

அதில் குண்டு பாய்ந்த வலியில் தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அப்போது கனவு குறித்து மார்க் கூறவே, அக்கம் பக்கத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அங்கு திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்தது. அதனையடுத்து, 1.50 லட்சம் டாலர் பிணை தொகை செலுத்தி விடுதலையானார்.