படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுட்ட சிவாஜி... - ரத்த வெள்ளத்தில் சரிந்த தயாரிப்பாளர்... - வெளியான அதிர்ச்சி தகவல்..!
படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுட்ட சிவாஜியால், தயாரிப்பாளர் ரத்த வெள்ளத்தில் சரிந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுட்ட சிவாஜி
1958ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ‘பதி பக்தி’. இப்படத்தை பீம் சிங் தயாரித்து இயக்கினார்.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஜெமினி கணேசனை, சிவாஜி கணேசன் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த காட்சியில் பயன்படுத்த டம்மி புல்லட்டுகள் நிறைந்த ஒரு துப்பாக்கியை சிவாஜி கணேசனின் கையில் கொடுத்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தயாரிப்பாளர்
ஜெமினி கணேசனை நோக்கி சுடுவது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிவாஜியின் கையில் இருந்த துப்பாக்கியிலிருந்த ஒரு குண்டு அங்கு நின்றுகொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகி ஜி.என்.வேலுமணியின் காலில் கீச்சிவிட்டது.
அது டம்மி குண்டுதான் என்றாலும், குண்டு பாய்ந்த வேகத்தில் அவரது காலிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. இதைப் பார்த்த சிவாஜி அப்படியே பதறிப் போய்விட்டார். இதனையடுத்து, அவசர அவசரமாக வேலுமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
மருத்துவம்னையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் ஜி.என்.வேலுமணியை பார்க்க சிவாஜி வந்தார். அப்போது, அனுமதிக்கப்பட்டிருந்த வேலுமணியைப் பார்த்து, நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்போறேன். இப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருக்க நீங்கள், இனி தயாரிப்பாளராக மாறுங்கள். ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கிவிடுங்கள்.
என்னை வைத்து முதல் படத்தை தயாரியுங்கள். நான் நடிப்பதால் உங்களுக்கு பல ஃபைனான்சியர்கள் பணம் தர முன்வருவார்கள். அதனால், சிகிச்சை முடிந்து வந்த பிறகு, தயாரிப்பு பணியை தொடங்குங்கள். பீம் சிங் அத்திரைப்படத்தை இயக்குவார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய ஜி.என்.வேலுமணி, சிவாஜியை வைத்து “பாகப்பிரிவினை” என்ற படத்தை தயாரித்தார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோரை வைத்து பல வெற்றித்திரைப்படங்களை தயாரித்து வெற்றியாளராக மாறினார் ஜி.என்.வேலுமணி.