டிரம்ப்பின் உத்தரவுக்கு வந்த சிக்கல் - மகிழ்ச்சியில் இந்தியர்கள்
டிரம்ப் வெளியிட்ட உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தியர்கள் நாடு கடத்தல்
அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்துவது, உலக நாடுகளுக்கு வழங்கிய நிதி உதவியை ரத்து செய்வது என பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்தி வருகிறார். கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை ரத்து
முன்னதாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த முடிவு அங்குள்ள அமெரிக்க குடியுரிமை இல்லாத மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மேன், "குடியுரிமை என்பது மதிப்புமிக்க உரிமை. அமெரிக்க அரசியலமைப்பின் 14வது சட்ட திருத்தம் இதை வெளிப்படையாக வழங்குகிறது. இது பல தலைமுறைகளாக நடைமுறையில் 14வது சட்ட திருத்தத்தை மாற்ற அனுமதிக்க முடியாது. டிரம்ப் அரசின் விளக்கத்தை எந்த நீதிமன்றமும் ஏற்காது" என கூறினார்.
ஏற்கனவே வாஷிங்டன் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. தற்போது, கிரீன்பெல்ட், மேரிலாந்து நீதிமன்றமும் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு அமெரிக்காவில் வசித்து வரும் என்ஆர்ஐ மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்
முன்னதாக பெற்றோர் யாராக இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. டிரம்ப் கொண்டு வந்த புதிய சட்டதிருத்தத்தில், குழந்தையின் பெற்றோர் இருவரில் ஒருவராவது, அமெரிக்கராகவோ, கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ அல்லது அதிகாரபூர்வ நிரந்தர இருப்பிட சான்று வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.
இவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து, கர்ப்பிணி பெண்கள் பலரும் இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கும் வரும் முன் சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனை நோக்கி படையெடுத்தனர்.