இனி அமெரிக்காவில் வருமான வரி கிடையதா? டிரம்ப் சொல்வது என்ன?

Donald Trump United States of America
By Karthikraja Jan 28, 2025 04:30 PM GMT
Report

அமெரிக்காவில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்,  சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்துவது, நீதிபதிகள் பதவி நீக்கம், மூன்றாம் பாலினத்தவர்கள் நீக்கம் என பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.  

donald trump

இந்நிலையில், குடியரசு கட்சி எம்.பிக்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது தொடர்பாக பேசியுள்ளார்.  

டிரம்ப் உத்தரவால் கலக்கம் - அவசரமாக சிசேரியன் செய்து கொள்ளும் கர்ப்பிணிகள்

டிரம்ப் உத்தரவால் கலக்கம் - அவசரமாக சிசேரியன் செய்து கொள்ளும் கர்ப்பிணிகள்

வருமான வரி

இது குறித்து பேசிய அவர், "வெளிநாட்டு நாடுகளை வளப்படுத்த நமது குடிமக்கள் மீது வரி விதிக்காமல், நமது குடிமக்களை வளப்படுத்த வெளிநாட்டு நாடுகளுக்கு வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்கர்களை பணக்காரர்களாக மாற்ற முடியும். 1870 முதல் 1913 வரையிலான காலகட்டம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பணக்காரர்களாக இருந்த காலம். அப்போது இறக்குமதி வரிகள் மூலம் நாடு மகத்தான வருவாயை ஈட்டியது" என கூறினார். 

donald trump

பணவீக்கம் அதிகரிக்கும் அமெரிக்கா குடி மக்களுக்கு தனிநபர் வருமான வரியை ரத்து செய்துவிட்டு, அதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பணவீக்கம் அதிகரிப்பதோடு, வட்டி விகிதம் குறைக்கப்படாமலே இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.