ஓரினச்சேர்க்கை: கால்பந்து போட்டியில் பத்திரிக்கை நிரூபரை டீசர்ட்டை கழற்ற சொன்ன கொடுமை!
கத்தாரில் பத்திரிக்கை நிரூபரை டீசர்ட்டை கழற்ற சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது.
கால் பந்து
உலக கோப்பை கால் பந்து 2022 கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. இங்கு போட்டியை காணவரும் வெளிநாடு ரசிகர்களுக்கு பல தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் மதித்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி கத்தார் அல் ரய்யானில் உள்ல அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்தது.
ஓரினச்சேர்க்கை?
அப்போது, அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் பணியாற்றும் நிரூபர் கிரண்ட் வாலை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதற்கு காரணம் அவர் டீசர்ட் தானாம். அதில் LGQBT வண்ணங்கள் கொண்ட கொடி இருந்தது. அதனால் அவர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிறுத்தப்பட்டார்.
அதனையடுத்து, 25 நிமிடங்களுக்கு பின் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛மைதானத்துக்கு நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டீசர்ட்டை கழற்றி மாற்ற வேண்டும் என கூறினார். செல்போனை பறித்தனர்.
அதன்பிறகு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த தலைவர் வந்து மன்னிப்பு கோரி என்னை விடுவித்து மைதானத்துக்குள் அனுமதித்தார்'' எனக் கூறினார். இந்த சம்பவத்திற்கு தற்போது பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.