இதற்கெல்லாம் No..மீறினால் சிறை - கால்பந்து உலக கோப்பையை சுற்றியுள்ள பகீர் சர்ச்சைகள்
கத்தாரில் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fifa Worldcup 2022
உலக கோப்பை கால் பந்து 2022 கத்தாரில் நடைபெற்று வருகிறது. இங்கு போட்டியை காணவரும் வெளிநாடு ரசிகர்களுக்கு பல தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் மதித்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைதானத்திற்குள் பீர் பாட்டில் அனுமதி இல்லை. இந்த தடைக்கு அதிக எதிர்ப்பு எழுந்ததால் மது இல்லாத பீர் பாட்டில் விற்பனைக்கு மட்டும் FIFA வும், கத்தார் அரசும் ஒப்புக்கொண்டுள்ளனர். பெண்கள் கண்டிப்பாக முழங்கால் வரை உள்ள ஆடைகளை அணிந்தே போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் செல்ல வேண்டும்.
தடை
ஸ்லீவ்லெஸ் டேங்க் டாப்ஸ் மற்றும் இரட்டை அர்த்த வாசகங்கள் கொண்ட ஆடைகளுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. ஆண்கள் தங்கள் மேலாடைகளை முழுவதுமாக கழற்றினால் அபராதம் உண்டு. சிறை தண்டனை கூட வித்திக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அப்பாற்பட்டு உறவு கொள்ளும் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல ஆபாசப் படங்கள், செக்ஸ் டாய்களை கத்தாருக்குள் இறக்குமதி செய்யவும் அனுமதி இல்லை.
பன்றி இறைச்சி, பிற மத புத்தகங்களை கத்தாருக்கு எடுத்துச் செல்வதும் சட்ட விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.