எனக்கு கேன்சர் இருக்கிறது... ஜோ பைடனே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

Cancer Joe Biden Viral Video United States of America
By Sumathi Jul 23, 2022 05:21 AM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நிர்வாக உத்தரவுகள் குறித்து விவாதிக்க, மாசசூசெட்ஸின் சோமர்செட்டில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்க ஆலைக்குச் சென்றார்.

எனக்கு கேன்சர் இருக்கிறது... ஜோ பைடனே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! | Us Joe Biden Says That He Has Cancer To Media

அப்போது பேசிய ஜோ பைடன், ``டெலாவேரில் உள்ள என்னுடைய குழந்தைப் பருவ வீட்டுக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. அதிலிருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் தீங்கை நம்மால் என்னவென்று யூகிக்க முடியாது. அதன் தீங்கைப்பற்றி அறியாமலேயே என் அம்மா எங்களை வளர்த்தார்.

புற்றுநோய் வந்தது

அமெரிக்க உறைபனி காலமென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். ஜன்னலிருந்து எண்ணெய் படலம் விழுவதைத் தடுக்க கண்ணாடி வைப்பர் ஜன்னலை அமைக்க வேண்டியிருந்தது.

அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால்தான் எனக்கும், அந்தப் பகுதியில் வசித்தப் பலருக்கும் புற்றுநோய் வந்தது. நீண்டகாலமாக, இந்த தேசத்தில் நாங்கள் வசித்த டெலாவேர் பகுதிதான் அதிக புற்றுநோய் விகிதம் கொண்ட பகுதியாக இருந்தது" எனக் கூறினார்.

 வீடியோ  வைரல்

அவர் பேசியது தீவிரமில்லாததாகத் தோன்றினாலும், அவர் தனக்கு புற்றுநோய் இருப்பது போன்று கூறிய அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் துணை செய்தி செயலாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், ஜனாதிபதியின் மாசசூசெட்ஸ் உரையில், அவர் தனது தோல் புற்றுநோயை அகற்றும் செயல்முறையை குறிப்பிடுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.