டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி - அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
டிரம்ப்பை கொல்ல செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மாத்தியூ க்ரூக் என்ற 20 வயது இளைஞரை அங்கிருந்த டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இந்த விசயம் உலக அரங்கில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரான்
இந்நிலையில் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் குறித்து தகவல் வந்துள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த போது ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.
இது குறித்து பேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், டிரம்பிற்கு எதிராக ஈரான் செய்து வரும் அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர், “ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி. ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். ஈரான் ட்ரம்பை சட்டத்தின் வழியில் சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.