கடவுள் இருக்காரா? இல்லையா? பள்ளியில் கேட்ட கேள்வி - வெடித்த சர்ச்சை!
கடவுள் இருக்காரா? இல்லையா? என பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாக வெடித்துள்ளது.
வீட்டுப்பாட கேள்விகள்
அமெரிக்கா, ஒக்லஹாமா மாகாணத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வினாத்தாளை மாணவியின் தாயார் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள்.
வெடித்த சர்ச்சை
இதனை ஆராய்ச்சி தாள் என சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் இது அற்பத்தனமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அதில் இடம்பெற்ற கேள்விகள்
1. உலகம் உருவானது எப்படி? 2. அதனை உருவாக்கியது யார்? 3. எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா? 4. ஒழுக்கம் என்றால் என்ன? 5. மதம் என்றால் என்ன? 6. கிறிஸ்துவம் என்றால் என்ன?
7. கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?
8. கடவுள் கடவுள் இருக்காரா? இல்லையா? 9. சாத்தான் இருப்பது உண்மையா?
இதனை பார்த்த இணையவாசிகள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். இதனையடுத்து, இந்த கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அப்பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.