வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக யூ.கே.ஜி மாணவனை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் : வலுக்கும் கண்டனம்
வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக யூ.கே.ஜி மாணவனை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோர் முறையீடு.
சென்னை கொளத்தூரில் உள்ள டான் பாஸ்கோ தனியார் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் சிறுவன் சச்சினை 3 பெண் ஆசிரியர்கள் சேர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என்று பள்ளிக்கு வர வைத்து அடித்து துன்புறுதியுள்ளனர்.
இதனால் அந்த சிறுவன் தனியார் மருத்துவ மனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளான்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர்க்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்ட போது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை ஆசிரியர்கள் கண்டித்துள்ளார்கள் அவ்வளவு தான் என்று மழுப்பி உள்ளனர்.
சிறுவனுக்கு நீதி கேட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்த போது இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று சிறுவனின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.