தளர்வான உள்ளாடை அணிந்த பெண்; விமானத்தில் அனுமதி மறுப்பு - வெடித்த சர்ச்சை!

United States of America Flight
By Sumathi Mar 30, 2024 12:30 PM GMT
Report

விமானத்தில் பெண் அனுமதிக்கப்படாத சம்பவத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.

தளர்வான ஆடை

அமெரிக்கா, உட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டிஜெய்னா லிசா(38). இவர் சால்ட் லேக் சிட்டியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விமானத்தில் செல்லவிருந்தார்.

தளர்வான உள்ளாடை அணிந்த பெண்; விமானத்தில் அனுமதி மறுப்பு - வெடித்த சர்ச்சை! | Us Girl Blame For Delta Flight In Loose Innerwear

அப்போது, அவர் தளர்வான வகையிலான பிரா அணிந்து பயணம் மேற்கொள்ள முற்பட்டதால் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், விமானத்தில் செல்ல குழுவினர் மறுப்பு தெரிவித்ததால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இருக்கையிலேயே சிறுநீர், எச்சில் துப்புதல், உள்ளாடை - விமான ஊழியரின் அதிர்ச்சி தகவல்!

இருக்கையிலேயே சிறுநீர், எச்சில் துப்புதல், உள்ளாடை - விமான ஊழியரின் அதிர்ச்சி தகவல்!

 அனுமதி மறுப்பு

உடனே அவர் இதுகுறித்து டெல்டா ஏர் லைன் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தலைமை செயல் அதிகாரி, மார்பகங்கள் என்பவை போர் ஆயுதங்கள் இல்லை.

delta flight

ஆண்கள் டி-சர்ட் அணிந்து தளர்வான உடைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை என்றபோது, அனைவர்க்கும் பொருந்தும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.