இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? தவிர்க்காம பாருங்க..!

health tips
By Anupriyamkumaresan Jul 18, 2021 10:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report
404 Shares

உண்மையில் உள்ளாடைகளை அணிவதை விட அணியாமல் இருப்பது நமக்கு பலவித நன்மைகளை தருகிறது. உள்ளாடைகளை அணியாமல் இருக்கும் போது பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் நோய் அபாயங்கள் குறைக்கப்படுகிறது.

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? தவிர்க்காம பாருங்க..! | Health Tips For All

சிறுவயதில் இருந்தே நாம் சுகாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகளை அணியக் கற்றுக்கொள்கிறோம். இருப்பினும் வீட்டில் இருக்கும் சில சமயங்களில் உள்ளாடைகளில் இருந்து விலகி இருப்பது உண்டு. பொதுவாக உள்ளாடைகளை அணியாமல் இருப்பது உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

உள்ளாடை அணியாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் :

பாக்டீரியா தொற்றை குறைக்கிறது :

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? தவிர்க்காம பாருங்க..! | Health Tips For All

பிறப்புறுப்பு பகுதியில் உருவாகும் திரவங்கள் உங்க உள்ளாடைகளில் பட்டு ஒரு வித ஈரத்தன்மையை உருவாக்கலாம். இதனால் ஈரமான பகுதியில் பாக்டீரியா பெருக்கம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் தொற்றே சில நேரங்களில் நோய்களுக்கு வழி வகுக்கும். எனவே தூங்கும் போது உள்ளாடைகளை துறந்து தூங்குங்கள். இதன் மூலம் காற்றோட்டமான சூழல் ஏற்பட்டு பாக்டீரியா தொற்று குறைய வாய்ப்பு உள்ளது.

சிறந்த தூக்கத்தை பெற உதவுகிறது :

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? தவிர்க்காம பாருங்க..! | Health Tips For All

இரவில் தூங்கும் போது உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும் என அறிவியல் கூறுகிறது. அந்தரங்க பகுதியில் அரிப்பு, எரிச்சல் இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் உள்ளாடைகளை துறந்து காற்றோட்டமாக தூங்குங்கள். ​

அந்தரங்க பகுதியில் அரிப்பு எரிச்சல் இருக்காது :

இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது நீங்கள் சங்கடமாக உணர நேரிடலாம். அந்தரங்க பகுதியில் ஏற்படும் வியர்வை, உள்ளாடைகள் சருமத்துடன் உராய்வு ஏற்படும் போது எரிச்சல், அரிப்பு ஏற்படும். எனவே முடிந்த வரை உள்ளாடை இன்றி இருப்பது இது போன்ற சங்கடங்கள் வராமல் தடுக்கும். இல்லை என்றால் நல்ல காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள். ​

பூஞ்சை தொற்று அபாயத்தை குறைக்கிறது :

அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் முக்கியமான தொற்றுகளில் பூஞ்சை தொற்றும் மிக முக்கியமானது. இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, அதிகப்படியான ஈரப்பதம் உள்ளாடைகளில் இருப்பது, தூய்மையற்ற உள்ளாடைகள் இவற்றால் பூஞ்சை தொற்று ஏற்படலாம். இது ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பு துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது பூஞ்சை தொற்று அபாயத்தை குறைக்கும். ​

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? தவிர்க்காம பாருங்க..! | Health Tips For All

துர்நாற்றம் வீசுதல் குறைகிறது :

தினசரி உள்ளாடைகள் அணிந்து உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை மற்றும் பிறப்புறுப்பு திரவ வெளியேற்றம் எல்லாம் இணைந்து அந்தரங்க பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்கும் அந்தரங்க பகுதியில் உண்டாகும் பாக்டீரியா பெருக்கம் காரணமாக அமைகிறது. எனவே பெண்களே உள்ளாடையின்றி தூங்குவது உங்க பிறப்புறுப்பு துர்நாற்றத்தை குறைக்க உதவி செய்யும்.