கடனால் அல்லாடும் அமெரிக்கா - அரசாங்க பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்!
அமெரிக்க அரசின் மொத்த தேசிய கடன் 23 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கடன்
அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டு பட்ஜெட் இல்லாமல், அரசாங்கத்தின் சில பகுதி பணிகள் ஸ்தம்பிக்கக்கூடும்.
அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் $34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ளது.
பெரும் ஆபத்து
ஆனால் 2020-ல் தொடங்கிய கோவிட் பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்திய அரசுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளனர்.
இந்த கடன் வரிகளை உயர்த்தாமல் திட்டங்களுக்கு செலவழிக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. தற்போது, அமெரிக்க பொருளாதாரத்தில் எந்த சுமையும் இருப்பதாக தெரியவில்லை.
இருப்பினும், இந்த கடன் பாதை தேசிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல முக்கிய திட்டங்களை வரும் ஆண்டுகளில் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
