மைக்கேல் ஜாக்சன் முதல் பில் கிளிண்டன் வரை - சிறுமிகளை சீரழித்த பிரபலங்கள்?

United States of America Sexual harassment Crime
By Sumathi Jan 05, 2024 05:23 AM GMT
Report

பாலியல் தொடர்பான வழக்கில் பில் கிளிண்டன் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் வழக்கு

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். நியூயார்க்கில் பிறந்த இவர், பல சர்ச்சைகளில் சிக்கியவர். தொடர்ந்து, இளம் பெண்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டதாகப் புகார் எழுந்தது.

bill-clinton and michael jackson

அதன்படி, 2005ல் கைதானார். பல மைனர் சிறுமிகள், இளம்பெண்கள் இவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தனர். இருப்பினும், 13 மாதங்கள் தான் சிறையில் இருந்தார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் - கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் - கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

சிக்கிய பிரபலங்கள்

அந்த சமயத்தில் தான் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், டிரம்ப் ஆகியோர் இவரிடம் இருந்து விலகினர். அதன்பின், மீண்டுக் 2019ல் சிறுமிகளை கடத்தி வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார். அப்போது ஒரே மாதத்தில் அவர் சிறையிலேயே உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

jeffrey-epstein case

இதற்கிடையே எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ரகசிய நீதிமன்ற ஆவணங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைகேல் ஜாக்சன், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒருமுறை பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரிடம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் சின்ன வயதில் இருப்பவர்களையே விரும்புவார் என கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.