மன அழுத்தத்தை போக்கனுமா? ஆடையில்லாமல் பயணம் - கப்பல் நிறுவனம் ஏற்பாடு!
ஆடையின்றி பயணிக்கும் பயணத்தை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
மன அழுத்தம்
டெக்சாஸை தளமாகக் கொண்ட பயண நிறுவனம் Bare Necessities. இந்த தனியார் நிறுவனம் தங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் இன்றி சுதந்திரமாக இருக்க விரும்புகிறவர்களுக்காக பிரத்யேக பயணத்தை ஏற்பாடு செய்கிறது.
மன அழுத்தமில்லாத, ஆடை இல்லாத பயண அனுபவத்தை அளிக்கும் உலகின் ஒரே கப்பல் பாதை இதுதான். 1990 முதல் மக்களுக்கு இதுபோன்ற பயணங்களை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் இதற்காக 9 விதமான விதிகளையும் வகுத்துள்ளது.
இந்த விதிகளை மீறினால் பயணிகள் கப்பலில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கேப்டனின் அனுமதிக்கு பிறகு பயணிகள் ஆடை இல்லாமல் உலாவ முடியும். துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படும் போது அனைவரும் முழு ஆடை அணிந்திருக்க வேண்டும்.
சிறப்பு ஏற்பாடு
சாப்பாடு அறையில் கூட பயணிகள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கேப்டன் உத்தரவிட்டபிறகு ஆடையை கழற்றி கொள்ளலாம். எப்போதும் உட்கார்ந்து, ஒரு சிறிய துணியால் உடலை மூடி கொள்ளவும். மற்ற பயணிகளை அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது.
எல்லோர் முன்னிலையிலும் காதல் செய்தல், காதல் எண்ணத்தில் மற்றவர்களை தொடுதல் கூடாது.
ஆபத்தான அல்லது முரட்டுத்தனமான நடத்தை கூடாது.
சட்டவிரோத பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.