6000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து - அரசு அதிரடி!
6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
விசா ரத்து
அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
இதற்கு காரணமாக, மது போதையில் வாகனம் ஓட்டுதல், குற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் சட்ட விதிகளை மீறுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
மேலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களை குறிவைத்தும் இந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து மாணவர் விசாவை ரத்து செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கான விசா நியமனங்களை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.