பாலம் உடைந்து கோர விபத்து; தீப்பிடித்து எரிந்த கப்பல் - உள்ளே 22 இந்திய மாலுமிகள்!
சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்த விபத்தில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைந்து விபத்து
அமெரிக்கா, பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும்.
இந்நிலையில், ஆற்றில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட அந்த கப்பல் இலங்கை நோக்கிபயணித்ததாக கூறப்படுகிறது. கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியது.
இந்திய மாலுமிகள்
இதில் சரக்கு கப்பலில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதற்கிடையில், பாலத்தின் பெரும் பகுதி அப்படியே உடைந்து ஆற்றில் விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் பழுது நீக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த சில தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர்.
உடனே விரைந்த மீட்பு படையினர் ஆற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். இந்த விபத்தில் மாயமான 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 22 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியதாகவும்,
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்து
இதனைத் தொடர்ந்து, பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.